வைகோவை தொடர்ந்து இப்போது கௌதமியும் பாதியிலேயே…?


கடந்த இரண்டு மாதங்களில் நடிகை கௌதமிக்கு கிடைத்த பாப்புலாரிட்டியே கொஞ்சம் அதிகப்படிதான்.. கமலை விட்டு பிரிவதாக அறிக்கை விட்டு வெளியேறினார். அடுத்ததாக நமது பிரதமர் மோடியை சந்தித்து பரபரபை ஏற்படுத்தினார். கடந்த மாதம் நம் தமிழக முதல்வர் மரணம் அடைந்த விஷயத்தில் மர்மம் உள்ளதாகவும், அதுபற்றி விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தினார்..

இப்போது நேற்று முன் தினம் நடைபெற்ற எப்.எம்ரேடியோ ஒன்றிற்கு பெட்டி அளித்துக்கொண்டு இருந்தபோது அதிலிருந்து கோபத்துடன பாதியிலேயே வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கௌதமி.. சில மாதங்களுக்கு முன் தந்தி டிவியில் தேவையில்லாமல் கேள்வி கேட்டார்கள் என வைகோ வெளியேறினாரே அதுபோல..

பேட்டி எடுத்த முன்னா என்பவர் வழக்கமான பாணியில் கமலுடன் பிரிந்தது ஏன், அரசியலுக்கு வருவீர்களா என்பதுபோன்ற சங்கடப்படுத்தும் கேள்விகளை கேட்டதுதான் கௌதமியின் கோபத்துக்கு காரணம்.. அதன்பின் பேட்டியாளர் அவரை சமாதனப்படுத்த முயற்சி செய்தும், இனி பேட்டியளிக்க என்ன இருக்கிறது, இதேபோல இன்னும் நாலு கேள்விகளைத்தானே கேட்கப்போகிறீர்கள் என கோபமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார் கௌதமி.. இதுதான் முதல்முறையாக ஒரு பேட்டியின்போது தான் பாதியிலேயே வெளியேறுவது முதன்முறை என்று குதமியே வருத்ததுடன் கூறியுள்ளார்.