சம்பளத்தையும் கொடுத்து வரியையும் கட்டிடுங்க ; ‘தல’யின் மாஸ்டர் பிளான்..!


‘தல போல வருமா’ என அஜித் ரசிகர்கள் பாட்டுப்பாடுவது போலவே உண்மையிலேயே தல போல யாரும் பக்காவாக பிளான் பண்ண மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.. இதை நாம் சொல்லவில்லை.. சமீபத்தில் அஜித்தை சந்தித்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ஒருவர் இன்னும் மிரட்சி மாறாத குரலில் தனது நட்பு வட்டாராத்திடம் சொல்லி வருகிறாராம்.

அது வேறு யாரும் இல்லையாம்.. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளார் தியாகராஜன் தானாம். யெஸ்.. அஜித்தை வைத்து அடுத்து படம் தயாரிக்கப்போகிறார் என சொல்லப்படுகின்ற அதே தியாகராஜன் தான்.. தயாரிப்பாளர்களில் ஏ.எம்.ரத்னம் தவிர, மற்ற பாரம்பரிய நிறுவனங்களுக்கு மரியாதை கொடுப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க விஜயா புரடக்சன்ஸ் போன்ற பழம்பெரும் நிறுவனங்களில் அஜித் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதனால் சத்யஜோதி தியாகாரஜன், நாமும் தான் முயற்சித்து பார்ப்போமே என அஜித்துடன் ஒரு சிட்டிங் பேச்சுவார்த்தை நடத்த போனாராம். அவரிடம் தேனொழுக பேசிய அஜித் ‘பேஷா பண்ணலாமே’ என்று சொல்லி தனது சம்பளம் நாற்பது கோடி என சொன்னாராம்.

ஏதோ இருபது அல்லது இருபத்தைந்துக்குள் கேட்பார் என நினைத்த தியாகாராஜன் அப்படியே ஷாக்காகி விட்டாராம். சரி எப்படியாவது பிசினஸ் பண்ணி கொடுப்பதை திருப்பி எடுத்துவிடலாம் என நினைத்த தியாகராஜன் கொஞ்சம் தெம்பாக நிமிர்ந்ததுமே அடுத்த அடியை போட்டாராம் ‘தல’

இந்த தொகைக்கான வருமான வரியை அதாவது 30 சதவீதமான 12 கோடி ரூபாயையும் பிளாக்கில் தந்து விடுமாறும் தான் அதை வரியாக கட்டிக்கொள்வதாகவும் கூறினாராம்.. கிட்டத்தட்ட தலைசுற்றலே வந்துவிட்டதாம் தியாகாராஜனுக்கு.. பின்னே பழைய ஆளில்லையா..? அப்படியானால் 52 கோடியா..? இவருக்கு மட்டுமே இவ்வளவு என்றால் இன்னும் மீதி செலவுகள் இருக்கிறதே என நினைத்தவர், அப்புறமா வர்றேன் தம்பி என வெளியே வந்து அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டு வீட்டுக்கு வந்தாராம்.

இதையும் மீறி இன்னும் கொஞ்ச நாட்களில் அஜித் படத்தை இவர்தான் தயாரிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்தால், சொல்வதற்கு ஒன்றுமில்லை.