இன்றைய சூழலில் படம் ரிலீசாவதற்கு முன் பைனான்ஸ் பிரச்சனை, யாரவது கேஸ் போட்டால் அதை சமாளிக்கும் பிரச்சனை ஆகியவை ஒரு தயாரிப்பளருக்கு முன் சவாலாக இருக்கின்றன.. ஆனால் அதையெல்லாம் சமாளித்து படத்தை ரிலீஸ் செய்தால் திரையுலகினருக்கு மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்தி, சவாலாக இருப்பது படம் வெளியான அன்றே ஆன்லைனில் படம் திருட்டுத்தனமாக லீக் ஆகும் விஷயம் தான்.
அதற்கடுத்துதான் திருட்டு விசிடி பிரச்சனைகூட.. இதற்கு சைபர் க்ரைம் மூலமாக என்னென்னவோ நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு வந்தாலும் கூட இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணையதளம் தான் தயாரிப்பாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‘எமன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டுடியோகிரீன் நிறுவன தயாரிப்பளார் ஞானவேல்ராஜா எங்களது சி-3’ படத்தை ரிலீஸ் நாளன்று காலை 11 மணிக்கே இணையத்தில் லைவாக வெளியிடுவதாக தமிழ்ராக்கர்ஸ் என்கிற இணையதளக்காரன் சவால் விட்டிருக்கிறான். இன்னும் ஆறுமாத காலத்தில் இந்த தமிழ்ராக்கர்ஸ் கும்பலை உள்ளே தள்ளி உட்கார வைக்கிறேன் பாருங்கள் சூளுரைத்துள்ளார்.