சமீபத்தில் வெளியான ‘கோலிசோடா-2′ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு ‘கோலிசோடா-2′ ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது என சிலாகிக்கும் க்ரிஷா க்ரூப் தற்சமயம் சுசீந்திரன் இயக்கிவரும் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் டைட்டில் ரோலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
“திடீரென ஒருநாள் சுசீந்திரன் சார் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. ஆடிஷனும் ஓகே ஆனது. இப்போதுவரை அவர், எப்படி என்னை இந்த கேரக்டருக்காக தேர்வு செய்தார் என்கிற விஷயம் கூட எனக்கு தெரியாது. சுசீந்திரன் சாரின் வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எல்லோரும் காமெடி நடிகராக பார்த்த ஒருவரை அவர் வேறு கோணத்தில் காட்டியிருப்பார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அவரது பிலிம் மேக்கிங் ஸ்டைலே புதிதாக இருக்கும்” என்கிற க்ரிஷா இந்தப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர்தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளாராம்.