கூர்க்கா ஸ்பூப் படம் அல்ல.. ஆனால் ; சஸ்பென்ஸ் வைக்கும் சாம் ஆண்டன்


இயக்குனர் சாம் ஆண்டனுக்கு 2019 ஒரு சிறப்பான ஆண்டு என்று கூறுவதை விட, இது வெளிப்படையாக அவருக்கு ஒரு ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’ கட்டமாகும். அவரது “100” திரைப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது அடுத்த திரைப்படம் “கூர்கா” இந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 12) திரையரங்குகளில் வெளியாகிறது. வேடிக்கை நிறைந்த டிரைலர் மற்றும் பெரிய பிரபலங்கள் பங்கு பெற்ற பாடல்கள் காரணமாக படத்திற்கு ஆடம்பரமான வரவேற்பு உள்ளது.

காட்சி விளம்பரங்களை பார்த்த பிறகு இது மற்றொரு ஸ்பூஃப் அடிப்படையிலான திரைப்படமா என்பதை அறியும் ஆர்வத்தில் இயக்குனர் சாம் ஆண்டனை கேட்டால், அவர் கூறும்போது, “நிச்சயம் இது ஒரு ஸ்பூஃப் படம் அல்ல. ஆனால் ஒரு சில ஸ்பூஃப் விஷயங்கள் படத்தில் உள்ளன, ஆனால் படத்தின் முக்கிய மையக்கரு ஒரு உணர்ச்சிபூர்வமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆரம்பம் “100” படத்தின் எடிட்டிங்கின் போது நடந்தது. ரூபனும் நானும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம். அது ஒரு மழை இரவு. ஒரு காதல் கதையை எழுதும் சூழ்நிலை என்பது வழக்கத்திற்கு மாறான கருத்தியலாக மாறியது, இந்த நகைச்சுவை, திரில்லர் பற்றி நாங்கள் விவாதிக்க ஆரம்பித்தோம். அடுத்த நாள், நாங்கள் யோகிபாபுவை அணுகி, அவரிடம் கதை சுருக்கத்தை விவரித்தோம். எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் அவர் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டார். பின்னர் நாங்கள் ஸ்கிரிப்ட்டில் முழுமூச்சில் வேலை செய்யத் தொடங்கினோம்” என்றார்.

கடனா நாட்டு மாடல் எலிசா எர்ஹாட் பற்றி சாம் ஆண்டன் கூறும்போது, “அவர் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் அன்புடனும், ஆதரவுடனும் இருந்தார். பல நேரங்களில், அவர் கேமரா முன் நடிக்கும் முன்பு, தனது பகுதிகளை மறுசீரமைத்து கொண்டிருந்தார். உண்மையில், இத்தகைய முயற்சிகள் படத்தை சரியான நேரத்தில் முடிக்க எங்களுக்கு உதவியாக இருந்தன.

அழகான லாப்ரடார் அண்டர்டேக்கரின் முக்கிய சிறப்பம்சம் குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, “ஆம், லாப்ரடார் இந்த படத்தின் இன்னொரு ஈர்ப்பாக இருக்கப் போகிறது. உண்மையில், கதை ஒரு சாதாரண கூர்கா மற்றும் ஒரு சோம்பேறி என முத்திரை குத்தப்பட்ட லாப்ரடரை பற்றியது. தீவிரவாதிகள் ஒரு ஷாப்பிங் மாலை கடத்தியபோது ஒரே இரவில் இவர்கள் இருவரும் எப்படி ஹீரோக்களாக மாறுகிறார்கள் என்பது தான் கதை” என்றார்.

4 மங்கீஸ் ஸ்டுடியோ தயாரிப்பாளர்களில் ஒருவரான சாம் ஆண்டன் கூறும்போது, “சகோதரர் சிவகார்த்திகேயன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் உட்பட அனைவரும் கூர்காவை வளர்ப்பதற்கு முற்றிலும் உதவியாக இருந்தனர். பிஸியான நேரத்திலும், சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு (போயா) பாடல் வரிகள் எழுதி கொடுத்தார். மேலும் தனிப்பட்ட முறையில் அழைத்து, பாடல் எவ்வாறு வந்திருக்கிறது என்றும் கேட்டார். இத்தகைய அன்பும் ஆதரவும் எங்கள் முழு மொத்த குழுவுக்கும் சிறந்த தூண்களாக இருந்தன” என்றார்.

ராஜ் ஆர்யன் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பை கையாள, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.