ஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..!


ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்னதி. ஆர்யாவுக்கு சரியான ஜோடி இந்த பொண்ணு தான் என்று அவரின் நண்பர்கள் தெரிவித்தனர். ஆர்யாவும் அபர்னதி மீது அக்கறை காட்டினார். ஆனால் இறுதியில் யாரையும் திருமணம் செய்யவில்லை.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்திய அபர்னதி ஜி.வி. பிரகாஷ் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். அந்த படத்தை காவியத் தலைவன் படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்குகிறார். படத்தில் ராதிகா சரத்குமார், பசங்க படம் புகழ் பாண்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிக் பாஸ் மூலம் பிரபலமான ரைசா, ஜூலி ஆகியோர் கதாநாயகியாக மாறியது போல எங்க வீட்டு மாப்பிள்ளையில் கிடைத்த புகழ், ஆர்யாவை திருமணம் செய்ய முடியாவிட்டாலும், அபர்னதிக்கு இதற்காக உதவட்டுமே