நடிகராக மாறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தான் நடிக்கும் படங்களில் சில அஜால் குஜால் விஷயங்களில் இறங்கி அடிக்கிறார்.. அது ஒர்க் அவுட் ஆகவே அந்த டெம்போவை அடுத்தடுத்த படங்களிலும் விடாமல் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தனது படங்களின் டைட்டில்களிலும் கவனம் செலுத்தி வருகிறாராம்.. காரணம் டைட்டில் தான் இன்று ரசிகனை தியேட்டருக்கு அழைத்து வரும் என திடமாக நம்புகிறார் ஜி.வி.
‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ என இவர் வைத்த டைட்டில் வடிவேலுவின் பேமஸான வசனம்.. அது படத்திற்கு சரியாக செட்டானதுடன் நல்ல பப்ளிசிட்டியையும் தந்ததால் தொடர்ந்து தனது படங்களுக்கு ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கெட்ட பையன்டா இந்த கார்த்தி’ என ஹிட் வசனங்களையே டைட்டிலாக்கி விட்டார். பிழைக்க தெரிந்த ஆள் தான்.