சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக மிகப்பெரிய பரபரப்பு அரங்கேறி வருகிறது.. சந்தேகப்படும் நட்சத்திரங்களை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய வருகின்றனர்.. இப்போதெல்லாம் சில பிரபலங்கள் ஆன்லைன் மூலமாகவே போதைப்பொருட்களை தங்களது வீட்டின் வாசலுக்கு வரவழைத்து வாங்கிக்கொள்கிறார்கள் என்பதால் அது போன்ற விஷயங்களை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கலால் துறை அதிகாரிகள் பாகுபலி புகழ் வில்லன் நடிகர் ராணாவுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காகவே ஸ்டுடியோவுக்கு வந்தார்களாம் அதிகாரிகள்.. ஆனால் ராணாவின் தந்தையோ அது ராணாவின் முதுகு வலிக்காக வரவழைக்கப்பட்ட மருந்து பார்சல் என கூறியுள்ளார்..
ஆனாலும் அதிகாரிகள் அந்த பார்சலை முழுதுமாக பரிசோதித்ததோடு அல்லாமல் ஸ்டுடியோ முழுக்க சோதனையும் நடத்தினார்களாம். ராணாவின் தந்தை சொன்னது உண்மை என உணர்ந்த பின்னரே அங்கிருந்து கிளம்பி சென்றார்களாம்.