இயக்குனர் ஹரியை பொறுத்தவரை அவரது படத்தில் பாடல்கள் என்பது இரண்டாம் பட்சம் தான். திரைக்கதைக்கு தரும் முக்கியத்துவத்தை அவர் பாடல்களுக்கு பெரிதாக கொடுப்பதில்லை. அதேசமயம் பின்னணி இசையில் மிகுந்த கவனம் காட்டுவார். அதனால் தனது படத்திற்கு இவர் தான் ரெகுலராக இசையமைக்க வேண்டும் என்கிற கொள்கையெல்லாம் ஹரியிடம் இல்லை..
பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீபிரசாத், யுவன் சங்கர் ராஜா என பலரும் மாறி மாறி இசையமைத்து வருகிறார்கள்.. சிங்கம் முதல் இரண்டு பாகங்களுக்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்தை(டி.எஸ்.பி) மாற்றிவிட்டு மூன்றாம் பாகத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜை இசையமைக்க வைத்து டி.எஸ்.பிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
தற்போது விக்ரமை வைத்து சாமி-2’வை இயக்கம் வேளைகளில் ஈடுபட்டுள்ளார் ஹரி.. இதன் முதல் பாகத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.. கடைசியாக சிங்கம்-3க்கு அவர்தான் இசை.. ஆக இந்த இரண்டு காரணங்களால் சாமி-2’வுக்கும் தன்னைத்தான் இசையமைக்க ஹரி அழைப்பார் என எதிர்பார்த்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஆனால் ஹரியோ மீண்டும் டி.எஸ்.பியை அழைத்து, ‘சாமி-2’வுக்கான இசையமைப்பாளர் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். ஹாரிஸ் பிசியாக இருப்பதால் டி.எஸ்.பிக்கு இந்த வாய்ப்பு போனதாக சொல்லப்படுகிறது.. உண்மை என்ன என்பது ஹரிக்கு மட்டும் தானே தெரியும்..