ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு விதமான பழக்கத்தை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருவார்கள்.. ‘அநேகன்’ படம் மூலம் தனது குழந்தைத்தனமான வித்தியாச நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அமைரா தஸ்தூரிடமும் அப்படி ஒரு பழக்கம் இருக்கிறதாம்.
அமைராவை பொறுத்தவரை தான் ஏதேனும் ஒரு படத்தில் ஒப்பந்தமானால் கூட அந்தப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு, படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க ஆரம்பித்த பிறகே அந்தப்படத்தில் நடிப்பது குறித்து வெளியே சொல்கிறாராம்.. ஒரு சென்டிமென்ட்டாக இதை சிரமப்பட்டு கடைபிடித்து வருகிறாராம் அமைரா..
காரணம் அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள சில நடிகைகள் இதுபோன்று முன்கூட்டியே சொல்லி, திடீரென அந்தப்படம் நின்று போனதால், அல்லது அந்தப்படத்தில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டதால் ஏற்பட சங்கடங்களை அமைரா கண்கூடாக பார்த்ததினால் தான் இந்த ரகசிய காப்பு வைராக்கியமாம்.
அநேகன் படத்தி தொடர்ந்து சிலகாலம் தமிழில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தவர், தற்போது சந்தனத்துக்கு ஜோடியாக ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ புகழ் மணிகண்டன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்..