அது மட்டும் என்னால முடியாது” ; தயாரான நடிகையிடம் பயந்த ஹீரோ..!


பொதுவாக ஒரு நடிகையிடம் ஒபந்தம் போடும்போதே இந்தப்படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி இருக்கிறதென்றால் முன்கூட்டியே சொல்லிவிடவேண்டும்.. அதற்கே அவர்கள் தாம் தூம் என குதிப்பார்கள்.. ஒரு சிலர் எந்த பாந்தாவும் பண்ணாமல் ஒப்புக்கொள்வார்கள்.. இதே ஹீரோ என்றால் லிப்லாக் காட்சி பற்றி ஸ்பாட்டில் சொனால் கூட போதும் உடனே தயாராகி விடுவார்கள்.. பின்னே கரும்பு தின கசக்குமா என்ன..?

ஆனால் இங்கே ஒரு ஹீரோ லிப்லாக் முத்த காட்சியா ஆளைவிடுங்க சாமி என கோரி அந்த காட்சியில் நடிக்க மறுத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.. அவர் வேறு யாருமல்ல, நடிகர் சிபிராஜ் தான். சிபிராஜ் தற்போது நடித்துவரும் படம் ‘சத்யா’. இந்தப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்

படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு ரம்யா கிருஷ்ணனுடன் லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது. ஆனால், சிபிராஜிடம் இயக்குனர் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி எவ்வளவோ விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். தன்னுடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பதுதான் அந்த லிப் லாக் காட்சியில் நடிக்க சிபிராஜ் மறுத்ததற்கான காரணமாம்