சிவகார்த்திகேயனின் ”ஹீரோ” பட போஸ்டர் வெளியீடு – சமூக வலைத்தளங்களில் வைரல்


நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ”ஹீரோ“. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்கியுள்ளார். இவர் இரும்புத்திரை படத்தை இயக்கியவர்.

இப்படத்தில் நடிகர் அர்ஜீனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்க, ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.