கைது பிரச்சனையை சாமர்த்தியமாக திசைதிருப்பிய அமலாபால்..!


நடிகை அமலாபால், இருக்கிறாரே.. நாம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அவர் பதில் சொல்வார். சில மாதங்களுக்கு முன் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது தான் மோசடி செய்ததை மறைத்துவிட்டு, நான் இந்திய குடிமகள், எனக்கு எங்கு வேண்டுமானாலும் கார் வாங்கும் உரிமை இருக்கிறது என அடாவடியாக பதிலளித்தார்.

இருந்தாலும் கேரளா போலீசாரும் கேரள உயர்நீதிமன்றமும் அமலாபலின் மோசடி விஷயத்தில் அக்கறை காட்டி, அவரை கைது செய்து பின் ஜாமீனில் விடுவித்தன. இந்தநிலையில் தான் தன்னை தொழிலதிபர் ஒருவர பாலியல் தொல்லை தருகிறார் என போலீசில் புகார் தந்து அவரை கைது செய்யவும் வைத்துள்ளார் அமலாபால்.

சொகுசு கார் வாங்கிய வழக்கில் கைதானபின் சில நாட்களுக்கு இதுதான் பேச்சாக இருக்கும் என்பதால் தன்னைப்பற்றிய நெகடிவ் இமேஜை மாற்றி மக்களிடம் பரிதாபம் தேடுவதற்காக இப்படி ஒரு அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார் அமலாபால் என்றே பலரும் பேசிக்கொள்கிறார்கள்.