ஒல்லிக்குச்சிக்கு ஒட்டடை குச்சி வில்லனானது எப்படி..?


‘கொடி’ படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தின். நாயகியாக ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் ராணாவுக்கு வித்தியாசமான வில்லன் வேடம் என்று சொல்லப்படுகிறது.

அதுசரி.. இந்த ஒட்டடை குச்சி எப்படி ஒல்லிக்குச்சி தனுஷ் படத்திற்குள் நுழைந்தார்..? இருவரும் நெருங்கிய நண்பர்கள் தானாம்… அதுமட்டுமன்றி கடந்த வருடம் சென்னை வெள்ள பாதிப்பின்போது தனுஷ் மற்றும் ராணா இருவரும் இணைந்து பெரிய அளவில் உதவிகளை வழங்கினார்கள்.. அப்போதே இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார்களாம். அதை கௌதம் மேனனிடம் சொல்ல அவரும் ஒகே சொல்லி, இருவரையும் இணைத்து படத்தையும் ஆரம்பித்து விட்டார்.