கடந்த வெள்ளிக்கிழமையன்று சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படம் வெளியானது.. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்தப்படம் இதுவரை சுமார் 24 கோடி ரூபாய் வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது.. இந்தப்படத்தின் வெற்றிக்காக ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி கூறும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது..
இந்த விழாவில் இறுதியாக பேசிய சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு தயாரிப்பாளர் ராஜாவின் இரண்டரை வருட அர்ப்பணிப்பு உணர்வு பற்றி குறிப்பிட்டபோது கொஞ்ச நேரம் தன்னையறியாமல் கண்கலங்கி விட்டார்..
அதன்பின் அழுகை கலந்த குரலில் அவர் பேசும்போது, “இந்தப்படத்தை ரிலீஸ் பண்ணவிடாமல் தயாரிப்பாளருக்கு எத்தனை தடைகள்..? நாங்க என்னங்க தப்பு பண்ணினோம் நல்ல படம் கொடுக்கவேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறோம்.. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா, சரியாக தூங்கி எத்தனை நாட்களாகிற்று தெரியுமா..?
எனக்கு பெரிய ஹீரோ ஆகவேண்டும் என்கிற ஆசையெல்லாம் இல்லை.. உங்களோட ஆசீர்வாதத்தால தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.. நான் ஏதோ இன்னொருத்தரோட வெற்றியை திருடிட்டு வந்தமாதிரித்தான் நினைக்கிறாங்க” என்று தனது மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்..
சிவகார்த்தியனை இவ்வாறு அழவைத்த அந்த சுள்ளான் யார்..? அவன் அவ்வளவு பெரிய வல்லவனா என் வந்தவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது..