தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி மீண்டும் எழத்தான் செய்திருக்கிறது.. இதற்கு அவர் நேரடியாக பதில் கூறாவிட்டாலும் போகிறபோக்கில் அவர் பேசிவிட்டு போகும் வார்த்தைகள் ஒருவேளை அரசியலுக்கு வரத்தான் அச்சாரம் போடுகிறாரோ என்றே தோன்றவைக்கின்றன.
மறைந்த நடிகர் சோவுக்கு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்ட ரஜினி, தமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது என கூறினார். இவர இப்படி கூறியதையும் ஒரு சிலர் திரித்து பார்த்து அதற்கு எதிர் கருத்து கூறவே செய்தார்கள்.
சில தினங்களுக்கு திடீரென தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளை சென்னை வரவழைத்து ராகவேந்திர மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் ரஜினி. இதுபற்றி புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின.. அவர் சும்மாவே ரசிகர்களை அழைத்து பேசினாலும் கூட இந்த நேரத்தில் அவர் அரசியலுக்கு தயாராகிறாரா, அதற்காக ரசிகர்களின் நாடி பிடித்து பார்க்கிறாரா என்கிற கேள்வியும் எழவே செய்கிறது. தவிர இப்போது எதற்கு தேவையில்லாமல் ஒரு கூட்டம் எனவும் சிலர் கேட்க ஆரம்பித்தார்கள்..
நிலைமை இப்படி இருக்க, நேற்று முன் தினம் ‘தெய்வீக காதல்’ என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அஆன்மீகம் குறித்து பேசிய ரஜினி அதிலும் அரசியல் குறித்து பொடிவைத்து பேசினார்.. ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பவர் அதிகம்.. நான் பவரை விரும்புவன் என்று கூறிய ரஜினி, உடனே அவராகவே அதற்காக நான் அரசியல் பேசுகிறேன் என நினைத்துவிட வேண்டாம்.. இது ஆன்மிகம் மட்டுமே” என சால்ஜாப்பும் கூறி மழுப்பினார்.. கடந்த ஒரு மாதத்திற்குள் இப்படி மூன்று நிகழ்வுகள் ரஜினி அரசியாலை நோக்கி நகர்வதாகவே காட்டுகின்றன. பார்க்க்கலாம் என்னதான் நடக்கிறதென்று..?