“ஆக்டர் வரக்கூடதுன்னா அப்ப டாக்டருக்கு மட்டும் என்ன வேலை” ; ரஜினிக்கு ஆதரவாக ராதாரவி கேள்வி..!


ரஜினியின் அரசியல் பிரவேஸ் கருத்துக்கள் குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து கோரி வருகிறார்கள்.. அதுவும் சினிமா துறையில் உள்ள ஆர்ஜே பாலாஜி, கஸ்தூரி போன்ற அல்லு சில்லு நடிகர்கள் கூட ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து தங்களுக்கு சீப்பான விளம்பரம் தேடிக்கொள்ளும் கூத்துகளும் நடக்கின்றன.

ஆனால் நடிகர் ராதாரவி சமீபத்தில் தான் பேசிய ஒரு மேடையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு தேவை ஒரு அக்கத்தார் அல்ல.. ஒரு டாக்டர்’ என அன்புமணி சொன்ன கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, “ஒரு டாக்டர் அரசியலுக்கு வரும்போது, ஒரு ஆக்டர் அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு” என விளாசியிருக்கிறார் ராதாரவி.