அவரு தமிழ்ல ரைம் பாடுனா இவரு இங்கிலீஷ்ல ரைம் பாடுறாரு…!


உங்களுக்கு ஞாபகம் இருக்குதா..? ஒரு படத்துல ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ன்னு விஜய் பஞ்ச் பேசுவாரு.. அதுக்கு இன்னொரு படத்துல அஜித், “அடிக்கிற அடிக்கிற அடில வட்டம், சதுரம் எல்லாம் காணாம போயிடும்’பாரு.. உடனே அஜித் ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரிச்சாங்க.. விஜய்க்கு பதிலடி கொடுத்துட்டாராம்மா..

அதேமாதிரி ‘வேதாளம்’ படத்துல வில்லன்களோட மோதுற அஜித் யாருக்கும் தெரியாம மாயாவி மாதிரி நின்னுக்கிட்டு, “கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடி யாரே’ன்னு தமிழ் ரைம் பாடி வில்லன்களை தெறிக்க விட்ருப்பார்.. இப்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி வெளியான ‘தெறி’ டீசர்ல போலீஸ்காரரான விஜய், “டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’னு இங்கிலீஷ்ல ரைம் பாடி கைதிகளை மிரட்டுறாரு.. இதுலாம் தானா வருதா..? இல்ல 11 பேர் கொண்ட டீம் ஒண்ணு இறங்கி வேலை பார்க்குதான்னு தெரியாம புலம்புறாங்களாம் ‘தல’ ரசிகர்கள்..