சிவருகிறார்கள் ரசிகர்கள்.. குறிப்பாக தேவசேனா கேரக்டரில் அனுஷ்காவையும், சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனையும் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்கமுடியவில்லை என்கிறாகள் ரசிகர்கள்..
இந்தநிலையில் தான் ரம்யா கிருஷ்ணன் கேரக்டரில் முதலில் ஸ்ரீதேவியைத்தான் நடிக்க அழைத்தார்கள் என்றும் அந்தம்மா பிகு பண்ணியதால் தான் அந்த வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு போனது என்றும் செய்திகள் வெளியாகின.. ‘புலி’ படத்தில் ஸ்ரீதேவியின் ‘பேய்’த்தனமான நடிப்பை கண்டு அரண்டுபோயிருந்த ரசிகர்கள், அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சை தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்..
இன்னும் சில ரசிகர்கள் ஒருபடி மேலாக போய், “இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்” என ஸ்ரீதேவி பேசுவதாக நினைத்து பார்த்தாலே மனம் நடுங்குகிறது.. நல்லவேளை நாமும் தப்பித்தோம்.. படமும் தப்பித்தது” என கூறிவருகின்றனர்.. ஒருகாலத்தில் கனவுக்கன்னியாக இருந்தாலும் கூட, இப்போது ரசிகர்களுக்கு கிலி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்த முன்னாள் நடிகை கைவிட்டால் நல்லது என்றே பலரும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.