“விஷால் ஒருவேளை இப்படி பிளேட்டை மாத்திட்டா..” ; பயப்படும் ஆர்யா..!


ஒருவழியாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தும் காட்டிவிட்டார் விஷால்.. கூடவே ஆர்யாவும் சங்கத்தில் ஒரு அங்கமாகிவிட்டார்.. இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள போகிறார்கள் என்கிற கேள்வியும் இவர்களை போகுமிடமெல்லாம் தொடர்ந்துகொண்டே வருகிறது.

நடிகர்சங்க கட்டடம் கட்டி முடித்தபின் தான் தனது திருமணம் என விஷால் திட்டவட்டமாக கூறிவிட்டார்.. ஆர்யாவுக்கு அப்படி எந்த பிளானும் இல்லை என்றாலும் கூட, விஷாலின் திருமணம் முடிந்தபின் தனது திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்துள்ளாராம்..

ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் சொந்த கட்டடம் கட்டவேண்டும் என்கிற பிளான் விஷாலிடம் இருக்கிறதாம். ஒருவேளை அந்த கட்டடத்தையும் கட்டிமுடித்து விட்டுத்தான் திருமணம் என திரும்பவும் புதுசா பிளேட்டை மாற்றினால் என்ன பண்ணுவது என்கிற பகீர் சந்தேகமும் ஆர்யாவுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறதாம்..