மின்சார திருட்டு ; தனுஷின் கேரவனை சிறைபிடித்த அதிகாரிகள்!


தனுஷ் எவ்வளவு பெரிய நடிகர் சமீபத்தில் கூட 125 விவசாயிகளுக்கு ஆளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கியிருந்தார் தனுஷ். அப்படிப்பட்டவரை கரண்ட்டை திருடி சங்கடப்பட வைத்திருக்கிறார்கள் அவருடன் சென்ற சிலர்..

ஆடி பெருக்கை முன்னிட்டு குலதெய்வ வழிபாட்டிற்காக நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யா, மகன்கள் மற்றும் அம்மா, அப்பா, சகோதிரிகள் ஆகியோருடன் தேனி சென்றிருந்தார். அதற்காக முத்துரெங்கபுரம் என்ற ஊருக்கு வந்த தனுஷ் குடும்பத்தினர், அங்குள்ள அவர்களது குலதெய்வதிற்காக வழிபாடு நடத்தினர்.

தனுஷ் குடும்பத்தாரின் வசதிக்காக, ஏ.சி வசதியுடன் கூடிய கேரவன் ஒன்றும் அவர்களுடன் அந்த கோயிலில் நின்றது. இதற்கான மின்சாரம் எங்கே இருந்து வருகிறது என்பதை ஆராய்ந்த அப்பகுதி ஊர்மக்கள், ஊர் பொது மின் கம்பத்தில் இருந்து கேரவனுக்கு மின்சாரம் வருவதை கண்டறிந்தனர்.

இந்த தகவல் அறிந்து அங்கே வந்த மின் வாரிய அதிகாரியும் தனுஷின் கேரவனுக்காக காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று மணி வரை முத்துரெங்கபுரம் ஊரின் பொதுமின்கம்பத்தின் இருந்த்து மின்சாரம் முறையின்றி எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.

அதையடுத்து தனுஷின் கேரவன் ஓட்டுநருக்கு ரூ.15,670 அபராதம் விதித்து, மின்சார வாரியம் உத்தரவிட்டது. ஆனால் இந்த விவகாரம் எல்லாம் அதிகாரிகள் பார்வைக்கு போகும் முன்னரே, நடிகர் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் முத்துரெங்கபுரத்தில் இருந்து கிளம்பிவிட்டார்களாம்..