விஜய்-அஜித் ரசிகர்களுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் பஞ்சாயத்து நமக்கு தெரிந்ததுதானே.. ஆனால் இப்படி இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வது (இணையத்தில் தான்) நன்றாகவா இருக்கிறது என தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பேசும்போது கவலைப்பட்டுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி..
அதுமட்டுமல்ல, இளைஞர்கள் பதினெட்டு வயதிற்குள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துவிட வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற உரசல்கள் நிகழாது என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். சரிதான்.. அப்படியே விஜய்சேதுபதி தான் எத்தனை வயதில் கட்சியில் சேர்ந்தார், இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்பதையும் சொல்லியிருந்தால் வருங்கால சந்ததியினர் அதை பார்த்து தெளிவாக நடந்துகொள்வார்களே..