‘வாளு போயி கத்தி வந்தது’ என்று சொல்வார்கள்.. ஆனால் ‘வாலு’ போயி ‘இது நம்ம ஆளு’ பிரச்சனை வந்து சிம்புவையும் அவரது தந்தை டி.ஆரையும் பிடித்துக்கொண்டுவிட்டது.. இரண்டு பாடல் எடுக்கவேண்டி இருக்கு.. ஆனா நயன்தாரா கால்ஷீட் தரமாட்டேன்னு சொல்றார் என டி.ஆர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், நாங்க புகார் கொடுக்கவெல்லாம் போகலை.. இன்னும் ரெண்டு பாட்டு எடுக்கணும். அதுக்கு நயன்தாராவை காண்டாக்ட் பண்ண முடியலை.. அவங்க நம்பர் தெரிஞ்சா கொடுங்கன்னு கேட்கப்போனோம்.. போன இடத்துல, அவங்களை நடிச்சுக்கொடுக்க சொல்லுங்க.. அவரோட சமபள பாக்கியை உங்ககிட்டேயே கொடுத்துர்றோம். நீங்களே அவர்கிட்ட கொடுத்துருங்க என நியாயத்தை பேசி அதத்தான் எழுதி கொடுத்துட்டு வந்தோம்.. நாங்க சாம்பார் தான் ஊத்தினோம், ஆனா தண்ணியா இருந்ததால ரசம் மாதிரி தெரிஞ்சிருக்கு என்கிற ரேஞ்சில் பிளேட்டை அப்படியே உல்டாவாக மாற்றியுள்ளாராம் சிம்பு.