நாசருக்கு சித்தார்த் உரிய மரியாதை தராததன் பின்னணி என்ன..?


நடிகர்சங்க தலைவராக தற்போது பொறுப்பேற்று இருக்கும் நாசர், படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் ஒன்றான ‘ஜில் ஜங் ஜங்’ படம் கடந்த வாரம் வெளியானது.. அதற்கு முந்தைய வாரம் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை சத்யம் தியேட்டரில் நடத்தினார் சித்தார்த். படத்தின் நடிகரும் தயாரிப்பாளரும் அவரே தான்.

ஆனால் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி கலந்துகொண்டாரே தவிர நாசர் கலந்துகொள்ளவில்லை.. ஒருவேளை ராதாரவியை அழைத்ததால் எதிர் தரப்பு பார்ட்டியான நாசரும் வந்தால் ஏதாவது தேவையில்லாத ரசாபாசமாகிவிடுமோ என்று நினைத்து நாசருக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்த்திருக்கலாம் என்றும், இல்லை நாசருக்கு அழைப்பு அனுப்பி, அவர் ராதாரவி வருவதை கேள்விப்பட்டு பின்வாங்கி இருக்கலாம் என்றும் கூட பேசிக்கொண்டார்கள்..

ஆனால் படம் வெளியாவதற்கு முதல் நாள் பத்திரிகையாளர் காட்சி திரையிட்டபோது, கொடுக்கப்பட்ட பிரஸ் ரிலீசில் படத்தில் நடித்த நண்டு சிண்டுகளின் பெயரெல்லாம் இடம்பெற்றிருக்க, நாசரின் பெயர் மட்டும் மிஸ்ஸிங். விசாரித்ததில் இதில் சித்தார்த்தின் பங்கு எதுவும் இல்லையென்றும் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கிய எஸ்பி.ஐ சினிமாஸ் தான் காரணம் என்றும் தெரியவந்துள்ளதாம்.

நடிகர் சங்க கட்டடத்தில் தாங்கள் போட்ட ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்றவர் நாசர் என்பதால், அவரை அவமானப்படுத்தும் விதமாக, ‘ஜில் ஜங் ஜக்’ படம் தங்கள் கைகளுக்கு வந்தபிறகு இந்த இரண்டு சில்லித்தனமான வேலைகளையும் அவர்கள் செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளதாம்.. படம் அவர்கள் கைக்கு போய்விட்டதால் சித்தார்த்தாலும் ஒன்றும் கூற முடியாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார்கள்.