மக்கள் தலைவனாக மாறுவதற்கு மூன்று மணி நேரம் ஒதுக்கினால் போதுமா விஜய்..?


விஜய்யின் கடந்தகால படங்களுக்கு அரசாங்க ரீதியில் அவ்வப்போது தடைகள் விழுந்தது எல்லாம் விஜய்யின் அரசியல் ஆசையினால் தான். அவர் தனது படங்களிலும் சில சமயம் போதுவேளியிலும் தனது ஆசையை அவ்வபோது வெளிப்படுத்தியே வந்துள்ளார். மக்களுக்காக குரல் கொடுப்பேன் என மக்கள் இயக்கம் என்கிற ஒன்றையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார் விஜய்..

அப்படிப்பட்ட விஜய் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக நேற்று அதிகாலை மெரீனா பீச்சுக்கு வந்து மாணவர்களின் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார்.. நல்ல விஷயம் தான்..

இரண்டு மணிக்கு வந்தார்… நன்றாக விடியும் முன்னரே அதாவது ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார். அதற்கு காரணம் ரசிகர்கள் தன்னை பார்த்துவிட்டால் தன் மீது கவனம் திரும்பிவிடும் என்றும் அவர்கள் தேவையில்லாமல் போராட்டத்தின் திசை மாறிவிடும் என்றும் சொல்லப்பட்டது.

எல்லோருக்கும் வாய்ப்பு தானாக தேடி வருவதில்லை.. வாய்ப்பை தானே உருவாக்கி கொள்ள வேண்டும். அல்லது தேடி வருகின்ற வாய்ப்பை சுயநலமில்லாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை நீண்டகாலமாக மனதில் இருக்கும்போது, இதை மனமுவந்து பயன்படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்புதானே.. சுயநலமாக இல்லாமல் இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கும் சக்தியாக தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கலாமே..?

ஆனால் விஜய்யின் மூன்று மணி நேர நாடகம், அவருக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தனது அடையாளம் துறந்து சாதாரண மனிதனாக ஒரு லாரான்சால் மெரீனா போராட்டத்தில் தினசரி பங்கெடுத்துக்கொள்ள முடியும்போது, போராட்டக்கரார்களுக்கு உதவியாக பல விஷயங்களை செய்ய முடியும்போது, விஜய்யால் மட்டும் முடியாதா ஏன்னா..?

ஆனால் பயம்… அது ஒன்றுதான் லாரன்சுக்கும் விஜய்க்குமான வித்தியாசம்.. இப்படி பயப்பட்டுக்கொண்டே இருக்கும் விஜய், இனி தனது ரசிகர்களை அரசியல் ஆசை காட்டி உசுப்பேற்றாமல் தனது அரசியல் ஆசையை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒழுங்காக சினிமாவை மட்டும் கவனித்தால் அதிலாவது முதலிடம் கிடைக்கும்.. வேறு என்ன சொல்ல..?