டைரக்டர் கழுவி கழுவி ஊத்திய இசைக்கு ஒன்றரை கோடி ரூபாயா..?


இன்று இசை ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது… சிம்பு, நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கான ஆடியோ ரைட்சையும் சேர்த்து ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது பிரபல ஆடியோ கம்பெனியான லஹரி நிறுவனம்.. இத்தனைக்கும் படத்திற்கு இசையமைத்திருக்கும் குறளரசனுக்கு இதுதான் முதல் படம் வேறு..

இந்த குறளரசனின் இசையைத்தான் சில மாதங்களுக்கு முன்பு படத்தின் இயக்குனரான பாண்டிராஜ் கழுவி கழுவி ஊற்றினார்.. அதற்கு இவ்வளவு மதிப்பா என ஆச்சர்யத்தில் வாய் பிளக்கின்றனர் திரையுலகத்தினர். இதில் இந்த லஹரி கம்பெனிதான் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முதலாக இசையமைத்த ரோஜா’ படத்தின் ஆடியோவையும் வெளியிட்டதாம்.

அந்த கைராசிப்படி இப்போது குறளரசனின் முதல் பட இசையையும் வெளியிடுவதால் ரஹ்மான் போல தனது மகனும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார் என டி.ஆர் பூரிப்பில் இருக்கிறாராம். ஆனால் விஷயம் தெரிந்த சிலரோ அவ்வளவு தொகைக்கு ஆடியோ ரைட்ஸ் போயிருப்பது டவுட்தான் என்றும் சும்மா பப்ளிசிட்டிக்காக இப்படி அள்ளி விடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்..