இயக்குனர் கோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சாயிஷா, மடோனா செபாஸ்டியன் ஆகியோரது பலர் நடிப்பில் கடந்த ஜூலை 27ம் தேதி வெளியான படம் ஜுங்கா. அருண் பாண்டியன், கே.கணேஷ் ஆகியோருடன் இணைந்து விஜய்சேதுபதி இப்படத்தை தயாரித்திருந்தார்..
தியேட்டருக்காக உரிமை கொண்டாடும் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியான 4 நாட்களில் மட்டும் ரூ.12 கோடி வசூல் செய்தது.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் தனக்கு ஜுங்கா படத்தின் மூலம் ரூ.11 கோடி வரையில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இப்படத்திற்கு முன்னதாக வந்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வி அடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. எனினும், செக்க சிவந்த வானம் மற்றும் 96 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படமாக அமைந்துள்ளன.