அட்லி டைரக்சனில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச்-20ல் நடைபெற உள்ளது.. வழக்கமாக தனது பட ஆடியோ ரிலீஸை கண்காணாத இடத்தில், அதாவது சென்னை அவுட்டரில் வைத்து நடத்துவதுதான் விஜய்யின் ஸ்டைல்.. ஆனால் இந்தமுறை சத்யம் தியேட்டரில் வைத்து நடத்த முடிவு செய்துள்ளார்கள்..
ஆனால் அதே தேதியில் தான் நடிகர்சங்க பொதுக்குழுவும் நடைபெற உள்ளது.. பொதுக்குழுவில் கலந்துகொள வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நடிகர்கள் அனைவருமே பொதுக்குழுவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அன்றைய தினம் நடக்கும் ‘தெறி’ ஆடியோ ரிலீஸ் நியாமும் பொதுக்குழு நேரமும் ஒன்றுக்கொன்று உரசுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.. அப்படியே நேரங்களை முன்பின் மாற்றிவைத்தாலும், பொதுக்குழுவில் நீண்ட நேரம் கலந்துகொள்ள வேண்டிருப்பதால் அந்த களைப்புடன் இந்த ஆடியோ ரிலீஸில் மற்ற வி.ஐ.பி நடிகர்கள் கலந்துகொள்வார்களா என்பது சந்தேகம் தான் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு பக்கம் பொதுக்குழு காலையில் நடைபெற்று, மாலையில் அடியோ ரிலீஸ் நடைபெற்றால் ப்ரீயாக இருக்கும் பல வி.ஐ.பிகளும் இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிராது. அப்படி நடந்தால் விழா களைகட்டும் என்பதால் நிச்சயம் பொதுக்குழு கூடும் நாளில் நாடத்துவது ப்ளஸ் தான் என்றும் சொல்கிறார்கள்.