பீப் சாங் விவகாரம் போலீஸ் தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுவிடும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் சிம்பு.. இவ்வளவு நடந்தும் தான் செய்தது தவறு என வருந்தும் மனமும் மன்னிப்பு கேட்கும் குணமும் சிம்புவுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான்..
இன்னொரு பக்கம் அந்த பாடலை நான் தான் பாடினேன், அந்த பாடலுக்கு அனிருத் இசையமைக்கவில்லை என வாண்டேடாக அவரை பிரச்சனையில் இருந்து கழட்டிவிட்டார். அடுத்து இந்த வீடியோ வெளியாக சிவகார்த்திகேயன் தான் காரணம் என ஒரு தகவல் பரவ, இல்லையில்லை அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என அவருக்கு நற்சான்று பத்திரம் வாசித்தார்..
சிம்பு நினைத்திருந்தால் வழக்கம்போல அவரது பாணியில் மற்றவர்களையும் இதில் இழுத்து விட்டிருக்கலாம் தான். ஆனால் அவர் அதைமட்டும் ஏன் செய்யவில்லை என்பதுதான் பயங்கரமாக குழப்புகிறது.. அப்படின்னா சிம்பு நல்லவரா..? இல்லை கெட்டவரா..?