இன்றைய தேதியில் சினிமாவில் தொடர்ந்து நடிக்கிறார்களோ இல்லையோ நடிகர் ராதாரவிக்கும், டி.ராஜேந்தருக்கும் கொஞ்சம் கூட செல்வாக்கு குறையவே இல்லை.. இவர்களது பேச்சுக்கள் அடங்கிய யு டியூப் வீடியோக்களை பாருங்கள்.. அதன் பார்வையாளர் எண்ணிக்கை சொல்லும் இவர்களின் மவுசை பற்றி..
இதில் ராதாரவி நடிகர்சங்க தோல்விக்குப்பின் தீவிரமாக அப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.. ஆனால் டி.ஆரோ தனது மகனை நாயகனாக ஆக்குவதற்காக தனது டைரக்சன் வேலையை ஒத்திவைத்தார். மகனின் மார்க்கெட் பிக்கப் ஆனதுமே நடிப்பையும் ஒத்திவைத்துவிட்டார்..
ஆனால் அநேகனில் கார்த்திக்கை இழுத்து வந்த கே.வி.ஆனந்தின் தற்போதைய டார்கெட்டாக சிக்கினார் டி.ஆர். ஆம்.. தனது படங்களை தவிர வேறு யார் படங்களிலும் நடித்திராத டி.ஆரை இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது புதிய படத்தில் எப்படியோ வளைத்துப்போட்டு விட்டார்.
விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் டி.ஆருக்கு காமெடி ரோல் என சொல்லப்படுகிறது.. இதுவரை டி.ஆர் காமெடியாக நடித்ததும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, இப்படி காமெடி கேரக்டரில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள வைக்க மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.