பாரதிராஜாவுக்கு ஒரு நியாயம்.. ஹெச்.ராஜாவுக்கு ஒரு நியாயமா..?


ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்த போதும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தது. இந்நிலையில் ஜனவரி 18ல் சென்னையில் நடந்த விழாவில் இந்து மத கடவுள் விநாயகரை இறக்குமதி கடவுள் எனறு பாரதிராஜா பேசினார்.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய அவர் எங்களை மீண்டும் ஆயுதம் எடுக்க வைத்துவிடாதீர்கள் என தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்து மக்கள் கட்சி சென்னை வடபழனி போலீசாரிடம் புகார் அளித்தது. ஆனால் அதை போலீசார் ஏற்க மறுத்ததாக அக்கட்சி பிரமுகர் நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாரதிராஜா மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என வடபழனி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

எல்லாம் சரி தான், தலையை வெட்டுவேன், வேசி மகன் என வைரமுத்துவை விமர்சித்த ஹெச்.ராஜாவுக்கு மீது வழக்கு பதிய முடியாதா..? நாக்கை வெட்டினால் கோடிகோடியாய் பணம் கொடுப்பேன் என கூறிய நயினார் நாகேந்திரன் மீதெல்லாம் வழக்கு பாயாதா..? பாரதிராஜாவுக்கு ஒரு நியாயம்.. ஹெச்.ராஜாவுக்கு ஒரு நியாயமா..? என பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்கள்.