இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறியவர் ஜி.வி.பிரகாஷ்.இசையமைக்கும்போது ஹிட் பாடல்களாக கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஹீரோவாக மாறிய பின்னர் அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகிறார்..
குறிப்பாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் திணறுகிறார் என்றே தோன்றுகிறது. சமீபத்தில் வெளியான இவரை நடித்த ‘செம’ படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அவருடைய அறிமுகப் படமான ‘டார்லிங்’ படம் ஒரு ரீமேக் படம் என்பதால் வெற்றி பெற்றது. இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ஒரு ஆபாசம் படம் என்பதால் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த 5 படங்களும் தோல்வியடைந்தது. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த ‘செம’ படமும் சேர்ந்து அவரின் தோல்வியை ‘செம’யாக தொடர வைத்திருக்கிறது. தனக்குப் பொருத்தமான கதைகளையோ, நன்றாக ஓடக் கூடிய கதைகளையோ தேர்வு செய்யும் திறமை அவருக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது. தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்து வந்தாலும் ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன.
தன்னைத் தேடி வரும் பல வாய்ப்புகளை சரியாகத் தேர்வு செய்தால் மட்டுமே வெற்றிகளையும் கொடுக்க முடியும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற முடியும். இதை ஜி.வி.பிரகாஷ் உணர்வாரா..?