சிம்புவின் சொந்த தயாரிப்பான ‘இது நம்ம ஆளு’ படமே ரிலீசாகாமல் இழுத்துக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் அவரை வைத்து படம் தயாரிக்கும் விபரீத முயற்சியில் இறங்கியுள்ளாராம் ‘ஈட்டி’, மிருதன்’ படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பன்.. கடிவாளம் என்னிடம் இருக்கும்போது எனக்கென்ன கவலை என தைரியமாக சொல்லி வருகிறாராம்..
இது தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்றும், வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் தான் இந்தப்படத்தை இயக்குவதாகவும் சொலப்படுகிறது. இந்தப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை நடிக்கவைக்கலாம் என இயக்குனர் மூலமாக நைஸாக நூல் விட்டு பார்த்தாராம் சிம்பு.
இயக்குனரை உட்காரவைத்த மைக்கேல் ராயப்பன், “தம்பி.. அந்தப்பையன் ஏற்கனவே நயன்தாராவை நடிக்க வைக்கணும்னு சொல்லி அந்தப்படத்தையே இப்ப ரிலீஸ் பண்ணமுடியாம நிக்குறான்.. இதுல இவரு ஆசைக்கு ஹன்சிகாவை இந்தப்படத்துல ஒப்பந்தம் பண்ணி நம்ம படமும் அதுமாதிரி பாதில நிக்கணுமா..? உங்களுக்கு அடுத்தடுத்து படம் பண்ற ஐடியா இருக்கா.. இலையா.. போங்க தம்பி.. போய் வேற ஹீரோயினை தேடுங்க”ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிச்சாராம்.