கேவலமான படம் தான் ;எடுத்தேன் மேடையில் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட இயக்குனர்


ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியான படம் திரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அதன்பிறகு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை இயக்கினார். இந்நிலையில, சென்னையில் நடந்த இமைக்கா நொடிகள் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கிய த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படம் கேவலமான கதை என அந்த மேடையிலேயே ஒப்புக்கொண்டார்.

அந்த மேடையில் இவர் அதை பேசுவதற்கு காரணமும் இருக்கிறது. இவர் இயக்கிய திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை தயாரித்த அதே கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயக் குமார் தான் இந்த இமைக்கா நொடிகள் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த விழாவில் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, நான் திரிஷா இல்லன்னா நயன்தாரா கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் அந்த கதையை தயாரிக்க முன்வரவில்லை. கடைசியாக ஜெயக்குமாருக்கு போன் செய்தேன்.கதையை கேட்டவர், நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ஆனால் அந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பு அவரது குடும்பத்தினருக்கு படத்தை போட்டு காண்பித்திருக்கிறார். படத்தைப் பார்த்த அவர்கள், இப்படியொரு படத்தை ஏன் தயாரித்தீர்கள் என்று அவரை பயங்கரமாக திட்டியிருக்கிறார்கள்.ஆனால் அப்படியொரு படத்தை தயாரித்த சி.ஜே.ஜெயக்குமார், இப்போது இமைக்கா நொடிகள் என்ற நல்ல படத்தை தயாரித்திருக்கிறார்” என தனது படத்தை குறைகூறி இமைக்க நொடிகளை பாராட்டி பேசினார்.