“பீப் சாங்கை விட நல்லா இருக்கும்” ; சிம்புவை கலாய்த்த பாண்டிராஜ்..!


கிறிஸ்துமஸுக்கு வெளியான ‘பசங்க-2’ மற்றும் பொங்கலுக்கு வெளியான கதகளி’ ஆகிய இரண்டு படங்களும் முதலுக்கு மோசமில்லை, அதேசமயம் படங்களும் பரவாயில்லை என்கிற பெயரை தக்கவைத்துள்ளன. இதனால் இந்தப்படங்களின் இயக்குனர் பாண்டிராஜ் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தவரிடம், இது நம்ம ஆளு படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு பாண்டிராஜ், “படத்தில் ஏற்கனவே நான்கு பாடல்கள் படமாக்கப்பட்டு உள்ளன. இன்னும் இரண்டு பாடல்களை படமாக்க வேண்டும் என சிம்பு பிடிவாதம் பிடிக்கிறார்.. இப்போதெல்லாம் பாடல்கள் வந்தாலே தியேட்டர்களில் ரசிகர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள்.. நயன்தாரா கால்ஷீட் கொடுப்பார் என நம்புகிறேன்” என்றவர் ‘இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஐ ஆம் வெய்ட்டிங்’ என்கிற பாடல் பீப் சாங்கை விட நன்றாக இருக்கும்” என போகிறபோக்கில் சிம்புவை கலாய்த்தார்.