இன்னொரு தடவை பஞ்சாமிர்தம் பிழியாம இருந்தா சரிதான்..!


ஹோட்டல்ல ஆயிரம் பேருக்கு சமைக்கிரவனுக்கு வீட்டுல ஆறு பேருக்கு சமைக்க தெரியாதுன்னு சொல்லுவாங்க.. அதேமாதிரி தியேட்டர்ல எந்தப்படம் ஓடும்னு செலக்ட் பண்ணி போட்டு லாபம் பார்க்கிறவங்களுக்கு அவங்க படம் தயாரிக்கும்போது மட்டும் இந்தப்படம் ஓடுமான்னு கணிக்க முடியாம போயிடுது..

ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஏ.வி.எம் நிறுவனம் தயாரிச்ச ‘அ ஆ இ ஈ’ படத்தையும் அபிராமி தியேட்டர் முதலாளி அபிராமி ராமநாதன் தயாரிச்ச ‘பஞ்சாமிர்தம்’ படத்தையும் இதுக்கு உதாரணமா சொல்லலாம். ‘பஞ்சாமிர்தம்’ பிழிஞ்சு கைய சுட்டுக்கிட்ட பின்னாடி கொஞ்ச நாள் அபிராமி ராமநாதன் சினிமா தயாரிக்காம ஒதுங்கி இருந்தாரு.

இப்ப திரும்பவும் சினிமா தயாரிக்கிற ஆசை வந்துருச்சு. படத்துக்கு அவரே கதை எழுதி ‘உன்னோடு கா’ என டைட்டிலும் வைத்து பூஜையும் போட்டுவிட்டார். படத்தை ஆர்.கே என்பவர் இயக்குகிறாராம். ஒகே.. இந்த முறையாவது பஞ்சாமிர்தம் பிழியாமல் இருந்தா சரிதான்.