தமிழ் சினிமா இயக்குனர் சங்கத்தில் “தலைவர்” அல்லது “செயலாளர்” பதவிக்கு போட்டியிட குறைந்தது 5 படம் இயக்கி இருக்க வேண்டும் என்றும் 10 வருடம் சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரபட்டுள்ளதாம்.. அதனை எதிர்த்து முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயக்குனர் அமீர் போன்றவர்களே 4 படம் மட்டுமே இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது..
அந்த வழக்கு இன்று 15 ஆவது கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அதற்கு இயக்குனர் சங்க தலைவர் திரு.விக்ரமன் அவர்கள் ஆஜர் ஆவதாக தெரியவந்துள்ளது.