விஷாலுக்கு எதிராக ஜே.கே.ரித்தீஷ் சபதம்..!


நடிகர் ரித்தீஷை பொறுத்தவரை தன்னை எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்திக்கொள்ள நினைப்பவர். கடந்த வருடம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து முன்னணியில் நின்று தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் ஜே.கே.ரித்தீஷ்.. ஆனால் இப்போதைய நிலையோ விஷால் மீது குற்றசாட்டுக்களை ரித்தீஷ் அள்ளி வீசும் அளவுக்கு வந்திருக்கிறது.

இந்த அளவுக்கு நிலைமை வர என்ன காரணம் என ஆராய்ந்தால் நடிகர் சங்கத்தில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று ஜே.கே.ரித்தீஷ் ஆரம்பத்தில் இருந்தே வருத்தப்பட்டாராம். ஆனால் எந்த பொறுப்பிலும் இல்லாதவருக்கு எப்படி முன்னுரிமை வழங்க முடியும் என்றார்கள் விஷால் தரப்பினர்.. இதுதான் ஜே.கே.ரித்தீஷை, அவர் யாரை எதிர்ததாரோ அந்த சரத்குமார் அணிக்கே மீண்டும் மாற வைத்து.

இப்போது விஷால் மற்றும் நாசர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் ரித்தீஷ். “தனக்கு பிடிக்காத, தன்னை ஆதரிக்காத துணை நடிகர்கள் நாடக நடிகர்கள் நூற்றுக்கணக்கானவர்களை சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்தார் விஷால் நான் எவ்வளோ சொல்லிப்பார்த்தும் அவர்கள் கேட்பதாக தெரியவில்லை. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற நினைக்கிறார்கள். அதற்காகவே குஷ்புவையும் எஸ்.ஆர்.பிரபுவையும் களம் இறக்குகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியை தோற்கடிப்போம்” என சபதம் போட்டுள்ளாராம் ரித்தீஷ்.