நல்ல நேரத்தில் சரியான முடுவுகளை எடுப்பவர் என தயாரிப்பாளர் ஜே எஸ் கே பாராட்டபட்டார்.
வெளிநாட்டில் வாழும் இந்தியரான கிறிஸ்டி திரை உலகில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வந்துஉள்ளார்.மேடை மற்றும் தெரு முனை நாடகங்கள் மூலம் சமூக விழுப்புணர்ச்சி நாடகங்கள் நடத்தும் போது இவருக்குபரிச்சயம் ஆனவர்தான்’குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா. அந்த பரிச்சயமே கிறிஸ்டி தயாரிக்க , பிரம்மா இயக்கத்தில் ‘குற்றம் கடிதல்’ உருவான கதை.
‘ எங்களதுதிறமையை மற்றவர்கள் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிய அளவில் உருவாக்க பட்ட படம் தான் ‘குற்றம் கடிதல்’. அந்த முயற்சியை வான்அளவுக்கு எட்ட உதவி , பாரெங்கும் எங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிட்டிட வித்திட்ட எங்களது ஆசானும் , வழிக் காட்டியுமான ஜே எஸ்கே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இவரிடம் எந்த நேரத்தில் எதை எப்படி கொண்டு சேர்ப்பது என்ற கலையைக் கற்றுக் கொள்ளவேண்டும்.மற்றவர்கள் அஞ்சக் கூடிய விஷயங்களில் இவர் துணிந்து முடிவெடுப்பதே அவருக்கு முக்கிய பலம்.சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தை திரையிட அவர் முடிவு செய்ததே அவரது தைரியத்துக்கு சான்று. படம் முடிந்தவுடன்கிட்டிய கரகோஷங்கள் பெரிதளவு அவருக்கே சாரும் .இவருக்கு தொடர்ச்சியாக விருதுகள் கிடைப்பதன் சூட்சமே அதுதான் போலும்.படங்களைதேர்வு செய்வதிலும் சரி, அதை எங்கு திரை இட வேண்டும் , எந்த திரைப்பட விழாவுக்கு அனுப்ப
வேண்டும்என்ற திட்டமிடுதல் ஆகிவற்றில் அவர்ஒரு தொழில் முன்னோடி. என்னை போல புதிய தயாரிப்பாளர்களுக்கும், பிரம்மா போன்ற புதிய திறமையான இயக்குனர்களுக்கும் அவரது வழிக்காட்டுதல் அவசியம். எங்களது திரை பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றிய ஜே எஸ் கே சாருக்கும் , எங்களது திரைப்படத்துக்கு களம்கொடுத்த எல்லா திரை பட விழா குழுவினருக்கும் குறிப்பாக சென்னை சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் திரு தங்கராஜ் , திருமதி சுஹாசினிமணிரத்னம்,திரு சரத் குமார்,
திருமதி ராதிகா சரத் குமார் அவர்களுக்கும் தேர்வு குழுவை சேர்ந்த இயக்குனர் பீ வாசுவுக்கும் , திருமதி பூர்ணிமாபாக்கியராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.எங்களை போன்ற இளைஞர்கள் மேலும் திரை உலகில் வளம் வர வரவேற்கும் திரை உலகின்மூத்த முன்னோடிகளுக்கும் நன்றி.