உலகம் முழுவதும் தற்போது மக்களை அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். தற்போது உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு காரணம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஜாக்கிஜான் காவல்துறை அதிகாரி ஒருவர் ஓய்வு பெறும் விழாவில் பங்கேற்றதாகவும் அதில் 49 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப் பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் ஜாக்கிஜானுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தற்போது இது குறித்து ஜாக்கிசான் கூறியுள்ளதாவது
“என்னைப் பற்றி கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. நான் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். தயவு செய்து கவலைப் படாதீர்கள். என்னை எங்கும் அடைத்து வைக்கவில்லை.
மற்ற எல்லோரும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். எனக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலவிதமான பரிசுப் பொருட்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அதில் நிறைய மாஸ்குகளும் இருந்தது மகிழ்ச்சியான செய்தி. அவற்றையெல்லாம் என் நிறுவனத்திடம் சொல்லி தேவையானவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்”.
என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஜாக்கிசான். இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.