தமிழ்சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் டிவி சேனல்களுக்கும் அறிவிக்கப்படாத ஒரு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது. எப்போது சேனல்களுக்கு வீடியோ கிளிப்பிங்க்ஸ், பாடல்கள கொடுப்பதில்கட்டுப்பாடு கொண்டுவந்து கைவைத்தார்களோ, அன்றிலிருந்து சேனல்களும் முறுக்கிக்கொண்டு பெரிய நடிகர்களின் படங்களை தவிர வேறு யாருடைய படங்களின் சாட்டிலைட் ரைட்சையும் வாங்காமல் மௌனம் காக்கின்றன.
தனுஷின் ‘மாரி’யே இன்னும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் கிடக்கிறதாம். ஆனால் இன்னும் படப்பிடிப்பே முடியாத ஒரு படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை படத்தின் பட்ஜெட்டைவிட பெரிய தொகைக்கு சூரிய சேனல் பேசிவருவதாக கேள்வி.. இத்தனைக்கும் படத்தின் ஹீரோ சிபிராஜ் தான்.
இதை மட்டும் வாங்க காரணம் என்ன..? ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் ரைட்ஸை சூரிய சேனல் தான் வாங்கி நல்ல லாபமும் பார்த்தது. இப்போது சிபி நடிக்கும் பேய்ப்படமான ‘ஜாக்ஸன் துரை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் பத்துநாள் ஷூட்டிங் பாக்கி இருக்கும்போதே அதை வெளியிடும் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கிவிட்டது.
விஷயம் இல்லாமல் தேனாண்டாள் பிலிம்ஸ் இப்டி அதிரடியாக உள்ளே நுழைய மாட்டார்களே என நினைத்த சூரிய சேனல், ஜாக்சன் துரையையும் இப்போதே சாட்டிலைட் ரைட்ஸ் விலை பேசிவிட்டால் நல்லது என பிசினஸ் டீலில் இறங்கிவிட்டார்களாம். ஆக, நாய்க்கும் பேய்க்கும் கிடைக்கும் மரியாதை மனுஷனுக்கு இல்லாமல் போச்சே என சில தயாரிப்பாளர்களும் முன்னணி நடிகர்கள் பலரும் புலம்புகிறார்களாம்.