சன்னிலியோனுடன் மீண்டும் குத்தாட்டம் போடும் ஜெய்


பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். ஒரு காலத்தில் நீலப்பட நடிகையாக இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரூட்டை மாற்றி சினிமா நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டு போகும் வேலையை செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார் சன்னி லியோன். அப்போது அவருடன் இணைந்து ஆடிய ஜெய்யை பார்த்து இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறதோ என பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்
காரணம் சன்னி லியோனுடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் இங்கே பலரின் கனவாக இருக்கிறது. தற்போது இன்னொரு ஜாக்பாட் அடித்தது போல, மலையாளத்தில் ஜெய் தான் நடித்து வரும் மதுர ராஜா படத்திலும் இதே சன்னிலியோனுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். இரண்டு மொழிகளிலும் அவர் நடித்த முதல் படத்திலேயே அவருடன் இணைந்து ஆடிய ஜெய்யை பார்க்கும் போது உண்மையிலேயே இவருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று தான் சொல்லத் தோன்றுகிறது.