சிம்பு செய்த உதவியால் மயிரிழையில் தப்பித்த ஜெயம் ரவி..!


கடந்த வெள்ளியன்று சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் ஜெயம் ரவியின் ‘வனமகன்’ படமும் வெளியானது. இரண்டு படங்களுக்கும் சரியான போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் சிம்பு படத்தை பார்த்துவிட்டு மீடியாக்கள் விமர்சனம் பண்ணுவதற்குள், தியேட்டர் வாசலிலேயே சிம்பு ரசிகர்களே படத்தை கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

வனமகன் படமும் பெரிய அளவில் ஹிட்டாகும் என சொல்லமுடியாதபடி தான் இருந்தது. அதேசமயம் பரவாயில்லை என்பதற்கும் மேலாகத்தான் இருந்தது.. சிம்பு படம் முதல் காட்சியிலேயே படுத்துவிட, அதன்பிறகு வனமகன் படத்திற்கு கடந்த மூன்று விடுமுறை நாட்களில் நல்ல கூட்டம் வர ஆரம்பித்ததாம்.

அதற்கேற்ற மாதிரி சிம்பு படத்தின் காட்சிகளை கணிசமாக குறைத்து விட்டு, ‘வனமகன்’ காட்சிகளையும் அதிகப்படுத்தினார்களாம்.. இதனால் வனமகன் படம் சேதாரத்தில் இருந்து தப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.