போக்கிரி ராஜா படத்திற்கு ரெட்கார்டு போடும் விநியோகஸ்தர்கள்!


தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுமா..? நிச்சயமாக கட்டும்.. இதற்கு சமீபத்திய உதாராணம் போக்கிரிராஜா படத்தின் ரிலீஸ் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சனை. போக்கிரிராஜா படத்தை தயாரித்துள்ள பி.டி.செல்வகுமார் தான் புலி படத்தையும் தயாரித்தார்.. ஆனால் புலி படம் வாங்கிய விநியோகஸ்தர்களின் கையை நன்றாகவே கடித்துவிட்டதாம்..

அந்த சமயத்திலேயே எங்களுக்கு நட்ட ஈடாக ஏதாவது செய்யுங்கள் என செல்வகுமாரிடம் கோரிக்கை வைத்தார்கள்.. அவரோ ரிலீஸ் அமையத்தில் நடந்த ரெய்டை சுட்டிக்காட்டி நாங்களே பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம் என சொல்லி அப்போதைக்கு எஸ்கேப் ஆனார்கள்.. அப்போது மிதியாக இருந்த வினியோகஸ்தர்களுக்கு இதுதானே அட்டாக் பண்ண சரியான நேரம்.. அதனால் போக்கிரி ராஜா படத்திற்கு ரெட்கார்டு போட்டுவிட்டனர்.

படம் வரும் பிப்-26ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறாராம் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார். எனவே இவர்கள் என்ன தேதி அறிவித்தாலும் அந்த தேதியில் போக்கிரி ராஜா ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகமே.வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்துவந்த ஜீவா இந்தப்படத்தை தான் நம்பியிருக்கிறார்.. அதற்கு இப்படி ஒரு சோதனையா என அவரும் நகத்தை கடித்துக்கொண்டிருக்கிறாராம்.