சும்மா இருந்தாலும் இருப்பாராம்..! ஆனால் சீமான் படத்தில் நடிக்கமாட்டாராம்..!!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தான் ‘பகலவன்’. விஜய் கதை கேட்டு ஃபோட்டோஷூட் நடத்தி ஒரு போஸ்டரையும் வெளியிட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பும் துவங்கும் நிலையில் இருந்தபோது சில காரணங்களால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.

காரணம் முதலில் விஜய் நடிப்பில் உருவாகவிருந்த இந்த பகலவன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாகத்தான் இருந்தது. அப்போது துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கு பட்ஜெட் கையை கடித்ததால், துப்பாக்கி தாணுவின் கைக்கு மாற, அதன் காரணமாக பகலவன் கைவிடப்பட்டது. விஜய்க்காக பொறுத்து பொறுத்துப் பார்த்த சீமான் ’விஜய் இல்லைன்னா வேற நடிகரே இல்லையா?’ என ஜீவாவிடம் போய் கதையை சொல்லியிருக்கிறார்.

சீமான் ‘பகலவன்’ கதையை பல வருடங்களாக பல‌ரிடம் சொல்லி வந்தது அனைவருக்கும் தெ‌ரியும் என்பதால் கதையை கேட்ட ஜீவா, “அண்ணே அற்புதமான கதைண்ணே.. நிச்சயம் நான் நடிக்கிறேண்ணே.. ஆனா கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுங்கண்ணே” என்று சொன்னவர், அந்த கொஞ்ச நாள் என்பது சில வருடங்கள் தாண்டும் என்பதையும் சூசகமாக சொல்லியிருக்கிறார்.

இதில் என்ன பியூட்டி என்றால் ‘கோ’ விற்கு பிறகு ஒரு படம் கூட சொல்லும் படியாக போகவில்லை , ‘யான்’ படம் அட்டர் பிளாப் ஆனபின்பு ஜீவாவை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வரவேயில்லை.. வீட்டிலும், தான் நடத்திவரும் ரெஸ்டாரண்டிலும் அடைந்து கிடந்த ஜீவாவை வைத்து அவரது தந்தையே படம் தயாரிக்க முன்வரவிலையே.. இந்த லட்சணத்தில் இவர் சீமானிடம் எதற்காக சில வருடங்கள் காத்திருக்க சொல்கிறார்..?

கத்தி பட பிரச்சனையின்போது தமிழன் பாதிகப்படக்கூடாது என்பாதால் தானே முன்வந்து யாருக்காக ஆதரவுக்கரம் நீட்டினாரோ அந்த விஜய்யே, பேச்சு மாறிய பின்பு, ஜீவாவெல்லாம் எம்மாத்திரம்..? இப்போது இதே கதை ஜெயம் ரவிக்கு சொல்லப்பட்டிருப்பதாக தகவல்.. அவராவது இந்த பச்சை தமிழனின் உணர்வை மதிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்..?