நம்ம ஊரில் சுள்ளான் கணக்கா இருந்துகொண்டு சுண்டுவிரலால் ரவுடிகளை பந்தாடும் டெக்னிக்குகளை பார்த்து பார்த்து நமக்கு பழகிப்போச்சு.. ஆனால் நம்மை தவிர வெளிநாட்டுக்காரர்கள் பார்த்தால் அதை காமெடி காட்சி என்று தான் எண்ணிக்கொள்வார்கள். இந்த விஷயம் ஜெயம் ரவி படத்திற்கு ஒரு ஹாலிவுட் சண்டைக்காட்சி இயக்குனரை அழைக்க போனபோது கூட நடந்துள்ளது.
பூலோகம்’ படத்தில் ஹாலிவுட்டை சேர்ந்த நாதன் ஜோன்ஸ் என்ற பிரபல மல்யுத்த வீரருடன் ஜெயம்ரவி மோதுகிறார். இந்த நாதன் ஜோன்ஸ் வெறும் மல்யுத்த வீரர் மட்டும் அல்ல, பல ஹாலிவுட் படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். ஜாக்கிசானுடன் நடித்த போலீஸ் ஸ்டோரி படத்தின் நான்காம் பாகமான ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில் ஜாக்கிசானையே மிரட்டியிருப்பார் நாதன் ஜோன்ஸ்.
ஆனால் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஹாலிவுட் ஆக்சன் இயக்குனர் நாலன் ஸ்டோன் ஆரம்பத்தில் அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்ளவில்லையாம்., நாதன் ஜோன்ஸும் ஜெயம் ரவியும் மோதினால் பார்ப்பதற்கே காமெடியாக இருக்கும் என்று கூறி சண்டைக்காட்சிகளை அமைக்க மறுத்துவிட்டாராம். அதன்பின் மொத்த ஸ்கிரிப்பட்டையும் கொடுத்து அவரை படிக்கச்சொன்னபின் தான் கதையில் அதற்கான காரணம் வலுவாக இருப்பதை உணர்ந்து சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்தாராம்.