“இப்படிப்பட்ட ஆளையா துணைக்கு வைத்திருந்தேன்” ; நடுங்கிய காஜல் அகர்வால்..!


கடந்த சில நாட்களாக போதைப்பொருள் பயன்படுத்திய பிரபலங்களின் விவகாரத்தால் தெலுங்கு திரையுலகமே அரண்டுபோய் கிடக்கிறது. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நடிகர் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை காஜல் அகர்வாலிடம் வெகுநாட்களாக மேனேஜராக இருந்து வரும் ரோனி, அவரது வீட்டிற்குள் காஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் ரோனிக்கு தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்தில் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள ரோனி தெலுங்கு திரையுலக நடசத்திரங்கள் பலருக்கும் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார். இந்த விவகாரத்தால் நடிகை காஜல் அகர்வாலுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனது மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளதை விட, இப்படிப்பட்ட ஒரு ஆளையா கூடவே வைத்திருந்தேன் என ஷாக்காகி நிற்கிறாராம் காஜல்..

மேலும் சமூக ஆரோக்கியத்தை சீரழிக்கும் எந்த செயலுக்கும் நான் ஆதரவில்லை. எனக்காக வேலை செய்பவர்கள் மீது நான் அக்கறையோடு இருப்பேன். ஆனால் அதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தேர்வுகளை என்னால் கட்டுப்பட்டுத்த முடியாது. இணைந்து வேலை செய்துவிட்டு அவரவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு திரும்பியவுடன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவர்கள் நடவடிக்கை என்ன என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது” என விளக்கமும் கொடுத்துள்ளார் காஜல்.