இதுவரை ரஜினி படங்களுக்கு டைட்டில் வைப்பதில் எந்த பிரச்சனைகளும் பெரிதாக எழுந்தததில்லை.. சிவாஜி என டைட்டில் வைத்தபோது கூட பிரபுவிடம் முறைப்படி அனுமதி வாங்கியதால் அதிலும் சிக்கல் எழவே இல்லை.. ஆனால் இப்போது முதன்முறையாக ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு டைட்டில் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின் தான் சிக்கலே எழுந்துள்ளது.
இந்தப்படத்திற்கு ‘கபாலி’ என டைட்டில் வைத்துள்ளதாக இயக்குனர் ரஞ்சித் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி அதற்கு ஆடியோ ரிலீஸ் கூட ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் ஆகியோர் முன்னிலையில் நடந்து முடிந்துவிட்டது. இனி படம் ரிலீஸாக வேண்டியதுதான் பாக்கி.
இப்படிப்பட்ட சூழலில் ஏற்கனவே இந்தப்பெயரில் படம் உருவாகி இருப்பதையோ, அல்லது இப்படி ஒரு டைட்டில் தயாரிப்பாளர் சங்கத்திலோ, பிலிம் சேம்பரிலோ பதிவு செய்யப்பட்டிருப்பதை அறியாமலேயே எப்படி இந்த டைட்டிலை ரஞ்சித்தால் அறிவிக்க முடிந்தது என்பதுதான் ரஜினி ரசிகர்களின் சந்தேகம்..
கண்ணபிரான் என்கிற டைட்டிலை வைக்கப்போவதாகவும் அது அமீரிடம் இருப்பதால் கேட்டு வாங்கிக்கொள்ளலாம் என்கிற பேச்சு சில நாட்களுக்கு முன் எழுந்ததே.. அப்படியாவது செய்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும்.. கேட்பது ரஜினி படத்திற்காகத்தான் என்றாலும் ஒரு படத்தின் ஆடியோ ரிலீசையே நடத்திவிட்டவர்களுக்கு இனி எப்படி தங்களது டைட்டிலை தரமுடியும்..?
ஆரம்பத்தையே சிக்கலுடன் தான் ரஞ்சித் ஆரம்பித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.