இந்தியன் 2 படத்தில் வயதான தோற்றத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறாரா?


கடந்த 1996ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயராகி வருகிறது.

இத்திரைப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகளை படமாக்கினார். இத்திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் 85வயது மதிக்கத்தக்க கதாபாத்திரத்தில், கமலின் மனைவியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.