சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.. இல்லைன்னா ஆப்பசைத்த குரங்கு.. இந்த இரண்டு உவமைகளில் எதுவேண்டுமானாலும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கு இந்த சூழலில் சரியாக பொருந்தும். பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜய்க்கு நெருக்கமாக இருந்த காரணத்தாலேயே, இயக்குனர், படத்தயாரிப்பாளர் என அடுத்தடுத்த நிலைக்கு மேலே ஏறினார்..
ஆனால் வரிசையாக இவர் தயாரித்த புலி, போக்கிரி ராஜா என ரெண்டு படங்களும் தோல்வி அடைந்ததால் கடன் நெருக்கடிக்கு ஆளானாராம். கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க நேற்று முன்தினம் தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம் என பத்து ஆட்களை கூட்டி திடீர் ஸ்டண்ட் அடித்து விஷயத்தை திசை மாற்றினார்.
அப்படியே விட்டிருந்தால் பரவாயில்ல.. அவரும், அதில் பேசியவர்களும் தயாரிப்பளர்களை பாதுகாக்க தவறினால் ‘கபாலி’ பட ரிலீஸ் நேரத்தில் ரஜினி வீட்டின் முன் போராட்டத்தில் குதிப்போம் என சொல்லி அதிர்ச்சியளித்துள்ளார்கள்.
இந்த தகவலை கேள்விப்பட்ட தாணு, அன்றைய தினமே நடந்த ஒரு விழாவில், “செல்வகுமார் ஏன் இப்படி பண்ணுகிறார் என்பது தெரியவில்லை.. புலி சமயத்தில் 30 லட்ச ரூபாய் கொடுத்து அவருக்கு உதவினேன். போக்கிரி ராஜா ரிலீஸ் நேரத்தில் 5 லட்சம் கொடுத்தேன்.. இன்னம் அந்தப்பணத்தை கூட திருப்பித்தரவில்லை.. அதைவிட்டுவிட்டு உண்ணாவிரதம், போராட்டம் என தேவையில்லாத ரூட்டில் போகிறார்.. நிச்சயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை உண்டு” என காட்டமாக கூறியுள்ளார்.